உங்கள் வாழ்வில் முக்கியமான முடிவுகளை எடுப்பது யார் ?
Who makes the important decisions in your life? |
ஒரு கிராமத்தில் சந்தைக்கு செல்வதற்காக கொஞ்சூண்டு பொருட்களை எடுத்துக்கொண்டு அப்பா மகன் இரண்டு பேரும் ஒரு கழுதை மேலேறி செல்கிறார்கள்.
இரண்டு பேருமே கழுதையின்மேல் பொருட்களை மட்டும் வைத்துக் கொண்டு இரண்டு பேரும் நடந்து போகிறார்கள்.
நடந்து போகும்போது எதிர்ப்புறத்தில் வரும் ஒருவர
அந்த அப்பாவைப் பார்த்து ஏம்பா சின்ன பிள்ளையை நடக்க விட்டு கூட்டி செல்கிறாய் கழுதை மேல் உட்காரவைத்து கூட்டிச் செல்ல வேண்டியதுதானே என்று கேட்டவுடன் அவரும் அவர் பிள்ளையை கழுதையின்மேல் பொருட்களுடன் உட்காரவைத்து கூட்டிச் செல்கிறான்.
அப்படியே சிறிது தூரம் நடந்து செல்லும்பொழுது எதிர்புறம் மீண்டும் வேறொருவர் வருகிறார் அவர் கூறுகிறார் ஏம்பா அவன் சின்ன பிள்ளை தானே அவன் நடந்து வரட்டும் நீ வயதானவர் தானே நீ கழுதை மேல் ஏறி வர வேண்டியதுதானே என்று கூறவும் இவனும் இதுவும் நல்லாதானே இருக்கும் என்று சிறுவனை நடக்க விட்டுவிட்டு இவன் கழுதை மேல் உட்கார்ந்து வருகிறோம்.
அப்படியே கொஞ்ச தூரம் நடந்து செல்லும் பொழுது மீண்டும் ஒருவர் கேட்கிறார் என் பையனை மட்டும் நடக்கவிட்டு கூட்டிட்டு போற ரெண்டு பேருமே உட்கார்ந்து போவதுதானே அப்படின்னு சொன்னதும் இரண்டு பேருமே கழுதையின் மேல் உட்கார்ந்து செல்கிறார்கள்.
இன்னும் சிறிது தூரம் நடந்து செல்லும்பொழுது இன்னொருவர் சொல்கிறார் ரெண்டு பேரும் கழுதை மேல் உட்கார்ந்து போறீங்க அந்த கழுதை பாவம் இல்லையா நீங்க ரெண்டு பேரும் நடந்து வர வேண்டியதுதானே அப்படிக் கூறவும் அப்பாபள்ளை இருவருக்கும் என்ன செய்வது என்று தெரியவில்லை
.
திரும்பவும் இருவரும் நடக்கவே ஆரம்பித்துவிட்டார்கள் இது தான் இந்த உலகமும் நீங்கள் என்ன செய்தாலும் அதை குறை கூறுவதற்கு ஆளுங்க இருந்து கொண்டேதான் இருப்பார்கள்.
நீங்கள் என்ன செய்தாலும் அதை இப்படி செய்யலாமே அதை அப்படி செய்யலாமே என்று சொல்வதற்கு ஆட்கள் இருந்து கொண்டேதான் இருப்பார்கள் இந்த விமர்சனங்கள் அனைத்தையும் நீங்கள் காதில் வாங்கிக் கொண்டால் உங்களால் உருப்படியாக எதையும் செய்ய இயலாது.
அதற்குப் பிறகு இவர்கள் என்ன செய்தார்கள் என்றால் கொஞ்ச நேரம் அப்பாவுக்கு வந்தாய் கொஞ்சநேரம் மகன் உட்கார்ந்து வந்தால் யாருக்கு சோர்ந்து வருதோ அவர்கள் உட்கார்ந்து வந்தார்கள் ஒரு கலவையாக இதை செய்து வந்தார்கள்.
எல்லாரும் விமர்சனம் சொன்னால் அதை ஏற்றுக் கொள்ளக் கூடாதா என்று கேட்டால் அப்படி கிடையாது நல்ல விமர்சனம் செய்பவர்களை நாம் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும் ஒரு தொழில் தொடங்குகிறோம் என்றால் அந்தத் தொழில் சம்பந்தப்பட்டவரிடம் நாம் விமர்சனம் கேட்பது மிகவும் நல்லது அதே நேரத்தில் அந்த தொழிலில் நஷ்டம் அடைந்து அவர்களிடம் நாம் விமர்சனம் கேட்பது நல்லது ஏனெனில் நமக்கு ஒரு நஷ்டம் வந்தால் அதிலிருந்து எப்படி வெளிவருவது என்று சிந்திப்பதற்கு அது நமக்கு உதவும்.
இதேபோன்று பன்னிரண்டாம் வகுப்பு முடித்தவுடன் ஆனாலும் ஒவ்வொரு அறிவுரை கூறுவார்கள் நீ இந்த துறையை தேர்வு செய்து இந்த துறையை தேர்வு செய்து என்று ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விமர்சனம் சொல்வார்கள் ஆனால் உங்களுக்கு எந்த துறை சரியானதாக இருக்கும் என்று நீங்களே தேர்வு செய்தால்தான் உங்களால் வாழ்வில் முன்னேற முடியும்.
Leave a Reply