பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து ஆலோசனை நடக்க இருக்கிறது
பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்துவது குறித்து இன்று மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் அனைத்து மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்களும் செயலாளர்களும் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த ஆலோசனைக் கூட்டம் ஆனது காணொளி வாயிலாக நடைபெற இருக்கிறது.
இந்த கூட்டத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவதைப் பற்றி அனைத்து மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் உடைய கருத்தைக் கேட்டு பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்துவது அல்லது ரத்து செய்வதா என்று முடிவு எடுக்கப்படும்.
மேலும் ஜேஇஇ போன்ற நுழைவுத் தேர்வுகள் நடத்துவது குறித்தும் இந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும்.
பொதுத்தேர்வு வைத்தால் மாணவர்களுக்கு எந்த ஒரு பிரச்சனையும் வராதவாறு பொதுத் தேர்வு வைக்க வேண்டும் என்பதில் அனைத்து மாநில அரசும் உறுதியாக உள்ளது எனவே பொதுத் தேர்வை நடத்துவதா அல்லது இதை ரத்து செய்வதா என்று இன்று ஆலோசனை கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு மிகவும் முக்கியமான ஒன்று என்பதால் இதை ரத்து செய்ய மாட்டோம் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்திருக்கிறார் இந்நிலையில் பொதுத் தேர்வு நடத்துவது குறித்து இன்று மத்திய அரசால் ஆலோசனை கூட்டம் காணொளி வாயிலாக நடைபெற இருக்கிறது.
மேலும் நீட் தேர்வு எப்பொழுது நடத்துவது கல்லூரிகளை எப்பொழுது திறப்பது பள்ளிகள் எப்போது திறப்பது என்று பல கேள்விகளுக்கு இந்த ஆலோசனை கூட்டத்தில் விடை தெரியலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களும் கலந்து கொண்டுள்ளார் அவருடைய கருத்து என்னவென்றால் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்திய ஆக வேண்டும் என்பதே இவருடைய கருத்து இதை ஆல்ரெடி ஒருமுறை கூறியிருக்கிறார் எனவே பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் சிபிஎஸ்சி பொதுத் தேர்வு நடத்துவது குறித்து ஜூன் 1ஆம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடைபெற இருக்கிறது மேலும் பொது தேர்வு நடப்பதற்கு 15 நாட்களுக்கு முன்னதாகவே அதை பற்றிய அறிவிப்பும் வெளியிடுவோம் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
Leave a Reply