12th tamil important அணி இலக்கணம்(Ani ilakkanam)

 1.பொருள் வேற்றுமை அணியைச் சான்றுடன் விளக்குக

அணி விளக்கம் : 

                           இருவேறு பொருள்களுக்கு இடையே உள்ள ஒற்றுமையை முதலில் கூறி பின் வேறுபடுத்திக் காட்டுவது பொருள் வேற்றுமை அணி. 

சான்று : 

ஓங்கலிடை வந்து உயர்ந்தோர் தொழ விளங்கி

ஏங்கொலிநீர் ஞாலத்து இருளகற்றும் ஆங்கவற்றுள் 

மின்னேர் தனியாழி வெங்கதிரொன்று ஏனையது 

தன்னே ரிலாத தமிழ் .

(தண்டியலங்கார உரை மேற்கோள் பாடல்)

பொருத்தம்

  ஒற்றுமை : 

                கதிரவனும் தமிழும் இருளைப் போக்குகிறது 

வேற்றுமை : 

               கதிரவன், உலகின் புற இருளைப் போக்குகிறது.

தமிழ், மக்களின் அறியாமை என்னும் அக இருளைப் போக்குகிறது.

எனவே, கதிரவனை விட தமிழ் உயர்ந்தது.

**********************************************


2.நிரல்நிறை அணி சான்று தந்து விளக்குக.

அணி விளக்கம் : 

                       சொல்லையும் பொருளையும் வரிசையாக நிறுத்தி, அவ்வரிசைப்படியே பொருள் கொள்ளச் செய்வது நிரல்நிறை அணி.

சான்று :  

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை 

பண்பும் பயனும் அது.

பொருத்தம் :

 ‘அன்பும் அறனும் உடைய இல்வாழ்க்கை

பண்புடையதாகவும் பயன் மிக்கதாகவும் அமையும் என வரிசை முறைப்படி பொருள் கொள்ளப்படுவதால், இது நிரல்நிறை அணி ஆயிற்று.

**********************************************


3.ஏகதேச உருவக அணியைச் சான்றுடன் விளக்குக:-

 அணி விளக்கம் : 

                         ஒரு பொருளை உருவகம் செய்து, அதற்கு இணையான மற்றொரு பொருளை உருவகம் செய்யாது விட்டுவிடுவது ஏகதேச உருவக அணி.

சான்று : 

சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும் 

ஏமப் புணையைச் சுடும்.

பொருத்தம் : 

             சினத்தை நெருப்பாகவும் இனத்தைத் தெப்பமாகவும் உருவகம் செய்த வள்ளுவர் உலக வாழ்க்கையைக் கடலாக உருவகம் செய்யாமல் விட்டுவிட்டேன்.

**********************************************

4.தொழில் உவமை அணியைச் சான்றுடன் விளக்குக .

அணி விளக்கம் : 

                                ஒரு பொருளின் தொழில் அல்லது செயல் காரணமாக அமையும் உவமை தொழில் உவமை எனப்படும்.

சான்று : 

அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார்

பொருத்தம் : 

                   இக்குறளில் தீக்காய்தல்’ என்னும் செயல் (தொழில்), அரசரோடு பழகுவதற்கு உவமையாகக் கூறப்பட்டுள்ளது. எனவே, இது தொழில் உவமையணி.

**********************************************

5.உவமை அணியைச் சான்றுடன் விளக்குக

அணி விளக்கம் : 

                       உவமை ஒரு தொடராகவும் உவமேயம் மற்றொரு தொடராகவும் அமைந்து உவம உருபு வெளிப்படையாக வருவது உவமையணி.

சான்று : 

உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள் பாம்போடு உடனுறைந் தற்று

பொருத்தம்:

உவமை : குடங்கருள் பாம்போடு உடனுறைதல் .

உவமேயம் : உடம்பாடு இலாதவர் வாழ்க்கை.

உவம உருபு : அற்று.

**********************************************

6.எடுத்துக்காட்டு உவமை அணியைச் சான்றுடன் விளக்குக

அணி விளக்கம் : 

                 உவமை ஒரு தொடராகவும் உவமேயம் மற்றொரு தொடராகவும் அமைந்து,உவம உருபு மறைந்து வருவது எடுத்துக்காட்டு உவமையணி.

சான்று : 

துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும் 

நஞ்சுண்பார் கள்ளுண் பவர்

பொருத்தம்:

உவமை : துஞ்சினார் செத்தாரின் வேறல்லர்

உவமேயம் : நஞ்சுண்பார் கள்ளுண் பவர்

உவம உருபு : மறைந்து வந்துள்ளது

**********************************************

7.சொற்பொருள் பின்வருநிலையணியைச் சான்றுடன் விளக்குக. 

அணி விளக்கம் 

                செய்யுளில், வந்த சொல்லே மீண்டும் மீண்டும் வந்து, தந்த பொருளையே தருவது சொற்பொருள் பின்வருநிலையணி.

சான்று 1 : 

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்ப தறிவு.

பொருத்தம் : 

           இக்குறளில், ‘பொருள்’ என்னும் சொல் மீண்டும் மீண்டும் வந்து, தந்த பொருளையே தருகிறது.

சான்று 2 

எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்

திண்ணியர் ஆகப் பெறின்

பொருத்தம் : 

              இக்குறளில், ‘எண்ணிய’ என்னும் சொல் மீண்டும் மீண்டும் வந்து, ‘நினைத்த எனத் தந்த பொருளையே தருகிறது.

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search


Categories