Why is this happening only to me? |
எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது என்று நினைப்பவர்கள் அதை நீங்கள் அப்ப இந்த கதையை படியுங்கள் ?
ஜப்பான் நாட்டு கடற்கரை பகுதியில் உள்ள மக்கள் அந்தக் கடற்கரைப் பகுதியில் உள்ள குட்டி குட்டி மீன்களை பிடித்து அந்த இடத்திலே அங்கேயே சமைத்து சாப்பிடுவார்கள் அது அருமையாக இருக்கும்.
அதைப் பார்த்துக்கொண்டிருந்த சுற்றி இருக்கும் கிராமத்து மக்கள் இந்த மீன்களைப் பிடித்துக் கொண்டு நம்மை கிராமத்தில் சமைத்து விற்கலாம் என்று நினைத்தார்கள்.
அதுபோல் முடிவு செய்து மீன்களைப் பிடித்துக் கொண்டு போய் சமைத்தால் அந்த அளவுக்கு ருசி கிடையாது எதிர்பார்த்த அளவுக்கு சுவை கிடையாது.
சரி நம்ம அந்த மீனை உயிருடன் பிடித்து வந்து சமைக்கலாம் என்று நினைத்து சிறிதளவு தண்ணீரில் அந்த மீனை உயிருடன் எடுத்து வந்து சமைத்து சாப்பிட்டால் அப்பொழுதும் அந்த மீன் சுவையாக இல்லை.
அந்தக் கடற்கரையில் நீரில் மீனை எடுத்து வரலாம் என்று எடுத்து வந்தால் அப்பொழுது அந்த மீன் சுவையாக இல்லை.
ரொம்ப நாள் யோசனைக்கு பிறகு ஒரு தொட்டி ஒன்று வாங்கி அதில் அந்த மீனை போட்டு அதில் ஒரு சில சின்ன சின்ன சுறா மீன்களைப் போட்டு எடுத்து வந்த சமைத்து சாப்பிட்டால் அது அவ்வளவு சுவையாக இருந்தது
இப்பொழுது மட்டும் சுவையாக இருக்கிறதே ஏன் என்று நினைக்கும் பொழுது அப்பொழுது தான் தெரிய வந்தது அந்த குட்டி மீன்கள் அதில் உள்ள சுறா மீன்கள் தண்ணீர சாப்பிட்டு விடுமோ என்று உயிர்க்கு பயந்துகிட்டு ஓடி ஓடித் திரிந்து சுறுசுறுப்பாக இருந்தது அதனால்தான் அது சுவையாக இருந்தது.
அது போல் தான் நாமும் நம்மைச் சுற்றி ஒரு பிரச்சனை இருந்தால் தான் நாம் சுறுசுறுப்பாக இருப்போம் பிரச்சனை இருந்ததால் தான் அந்த மீன் சுவையாக இருந்தது அது போல் தான் நம்மை சுற்றி எப்பொழுதும் ஒரு பிரச்சனை இருந்தால் தான் நாம் சுவையாக சந்தோசமாக வாழமுடியும்.
சுவை என்று நான் கூறுவது நமக்கு பிரச்சனைகள் வரும் பொழுதுதான் அடுத்தடுத்த கட்டத்திற்கு நாம் செல்ல வேண்டுமென்று உந்துசக்தி இருக்கக்கூடும்.
பிரச்சனைகள் இருந்தால் தான் சுறுசுறுப்பாக இருக்க முடியும் அதை எதிர்த்து செயல்பட முடியும் எனவே பிரச்சனையை கண்டு பயப்படாதே எனக்கு மட்டும் ஏன் இவ்வளவு பிரச்சனை இல்லை என்னாது.
Leave a Reply