முதல் உலகப்போரின் வெடிப்பும் அதன் பின்விளைவுகளும்
பின்வரும் வினகா்ககளு்ககு விரிவான விடை அளிக்கவும் :
1. முதல் உலகப் போருக்கான முக்கிய காரணங்கள் யாவை ?
ஐரோப்பிய நாடுகளின் அணி சேர்க்கைகளும்
எதிர் அணி சேர்க்கைகளும்
1900இல் ஐரோப்பிய வல்லரசுகளில் ஐந்து
அரசுகள், இரண்டு ஆயுதமேந்திய முகாம்களாகப்
பிரிந்தன. ஒரு முகாம் மையநாடுகளான
ஜெர்மனி, ஆஸ்திரிய-ஹங்கேரி, இத்தாலி
ஆகியவற்றைக் கொண்டிருந்தது. பிஸ்மார்க்கின்
வழிகாட்டுதலில் அவை 1882இல் மூவர்
உடன்படிக்கையை மேற்கொண்டன. இதன்படி
ஜெர்மனியும் ஆஸ்திரியாவும் பரஸ்பரம் உதவிகள்
செய்துகொள்ளும். மற்றொரு முகாமில் பிரான்சும்
ரஷ்யாவும் அங்கம் வகித்தன. 1894இல் மேற்கொண்ட
உடன்படிக்கையின்படி இவ்விரு நாடுகளில்
ஏதாவது ஒன்று ஜெர்மனியால் தாக்கப்படும்பட்சத்தில்
பரஸ்பரம் துணைநிற்கும் என உறுதிசெய்யப்பட்டது.
இப்படியாக இங்கிலாந்து தனிமைப்படுத்தப்பட்டது.
தன்னுடைய தனித்திருத்தலிலிருந்து வெளிவரும்
பொருட்டு இங்கிலாந்து இருமுறை ஜெர்மனியை
அணுகித் தோல்வி கண்டது. ரஷ்யாவின் மீதான
ஜப்பானின் பகைமை அதிகமானபோது பிரான்ஸ்
ரஷ்யாவின் நட்புநாடாக இருந்ததால் ஜப்பான்
இங்கிலாந்துடன் இணைய விரும்பியது (1902).
ஆங்கிலோ-ஜப்பான் உடன்படிக்கை பிரான்சை
இங்கிலாந்தோடு உடன்படிக்கை செய்துகொள்ளத்
தூண்டியது. அதன் மூலம் மொராக்கோ, எகிப்து
ஆகிய காலனிகள் தொடர்பான பிரச்சனைகளைத்
தீர்த்துக்கொள்ள விரும்பியது. இதன் விளைவாக
1904இல் இருநாடுகளிடையே நட்புறவு ஒப்பந்தம்
ஏற்பட்டது. மொராக்கோவில் பிரான்ஸ் சுதந்திரமாகச்
செயல்பட அனுமதிக்கப்படும் பட்சத்தில் எகிப்தை
இங்கிலாந்து கைப்பற்றியதை அங்கீகரிக்க பிரான்ஸ்
உடன்பட்டது. இதனைத் தொடர்ந்து பாரசீகம்,ஆப்கானிஸ்தான், திபெத் தொடர்பாக ரஷ்யாவுடன்
இங்கிலாந்து ஒப்பந்தம் மேற்கொண்டது. இவ்வாறு
இங்கிலாந்து, பிரான்ஸ், ரஷ்யா ஆகிய மூவரைக்
கொண்ட மூவர் கூட்டு உருவாக்கப்பட்டது.
வன்முறை சார்ந்த தேசியம்
தேசப்பற்றின் வளர்ச்சியோடு “எனது நாடு
சரியோ தவறோ நான் அதை ஆதரிப்பேன்” என்ற
மனப்பாங்கும் வளர்ந்தது. ஒரு நாட்டின் மீதான
பற்று மற்றொரு நாட்டை வெறுக்கும் தேவையை
ஏற்படுத்தியது. இங்கிலாந்தின் ஆரவாரமான
நாட்டுப்பற்று (jingoism), பிரான்சின் அதி தீவிரப்பற்று
(chauvinism), ஜெர்மனியின் வெறிகொண்ட
நாட்டுப்பற்று (kultur) ஆகிய அனைத்தும் தீவிர
தேசியமாக போர் வெடிப்பதற்கு தீர்மானமாக
பங்காற்றியது.
ஜெர்மன் பேரரசின் ஆக்கிரமிப்பு மனப்பாங்கு
ஜெர்மன் பேரரசரான
இரண்டாம் கெய்சர்
வில்லியம் ஜெர்மனியே
உலகத்தின் தலைவன்
எனப் பிரகடனம் செய்தார்.
ஜெர்மனியின் கப்பற்படை
விரிவு ப டு த ்தப்பட்ட து .
1805இல் டிரபால்கர்
போரில் நெப்போலியனின்
தோல்வி அடந்த தொடர்
இங்கிலாந்தின் தனியுரிமை எனக்கருதப்பட்டு வந்தது.
இந்நிலையில் ஜெர்மனியின் ஆக்கிரமிப்பு இயல்பு
கொண்ட அரசியல் விவேகத்தையும், விரைவாகக்
கட்டப்படும் அதன் கப்பற்படை தளங்களையும்
கண்ணுற்ற இங்கிலாந்து, ஜெர்மன் கப்பற்படை
தனக்கு எதிரானதே என முடிவு செய்தது. ஆகவே
இங்கிலாந்தும் கப்பற்படை விரிவாக்கப் போட்டியில்
இறங்கவே இரு நாடுகளுக்குமிடையிலான பதற்றம்
மேலும் அதிகரித்தது.
பிரான்ஸ் ஜெர்மனியோடு கொண்ட பகை
பிரான்சும் ஜெர்மனியும் பழைய
பகைவர்களாவர். 1871இல் ஜெர்மனியால்
தோற்கடிக்கப்பட்ட பிரான்ஸ் அல்சேஸ், லொரைன்
பகுதிகளை ஜெர்மனியிடம் இழக்க நேரிட்டது
குறித்த கசப்பான நினைவுகளை பிரெஞ்சு
மக்கள் ஜெர்மனியின் மீது கொண்டிருந்தனர்.
மொராக்கோ விவகாரத்தில் ஜெர்மனியின்
தலையீடு இக்கசப்புணர்வை மேலும் அதிகரித்தது.
மொராக்கோவில் பிரான்சின் நலன்கள் சார்ந்து,
இங்கிலாந்து பிரான்சோடு மேற்கொண்ட
ஒப்பந்தத்தை ஜெர்மனிஎதிர்த்தது. எனவே ஜெர்மன்
பேரரசர் இரண்டாம்கெய்சர்வில்லியம்மொராக்கோ
கெய்சர் வில்லியம் II
சுல்தானின் சுதந்திரத்தை அங்கீகரித்தததோடு
மொராக்கோவின் எதிர்காலம் குறித்து முடிவு
செய்யப் பன்னாட்டு மாநாடு ஒன்றைக் கூட்டும்படி
கோரினார்.
பால்கன் பகுதியில் ஏகாதிபத்திய அரசியல்
அதிகாரத்திற்கான வாய்ப்பு
1908இல் துருக்கியில் ஒரு வலுவான,
நவீனஅரசை உருவாக்கும் முயற்சியாக
இளம்துருக்கியர் புரட்சி நடைபெற்றது. இது
ஆஸ்திரியாவுக்கும் ரஷ்யாவிற்கும் பால்கன்
பகுதிகளில் தங்கள் நடவடிக்கைகளை
மீண்டும் தொடங்கும் வாய்ப்பினை வழங்கியது.
இது ஆஸ்திரியாவும் ரஷ்யாவும்
சந்தித்துப் பேசின. அதன்படி பாஸ்னியா,
ஹெர்சகோவினா ஆகிய இரண்டையும்
ஆஸ்திரியா இணைத்துக்கொள்வதென்றும்,
ரஷ்யா தனது போர்க்கப்பலை சுதந்திரமாக
டார்டனெல்ஸ், துறைமுகங்கள்
வழியாக மத்தியதரைக்கடல் பகுதிக்குள்
கொண்டு செல்லலாமென்றும் ஒப்பந்தமாயிற்று.
இதனைத்தொடர்ந்து பாஸ்னியாவையும்
ஹெர்சகோவினாவையும் தான் இணைத்துக்
கொண்டதாக ஆஸ்திரியா அறிவித்தது.
ஆஸ்திரியாவின் இவ்வறிவிப்பு செர்பியாவில்
தீவிரமான எதிர்ப்பைத் தூண்டியது. இதன்
தொடர்பில் ஜெர்மனி ஆஸ்திரியாவிற்கு உறுதியான
ஆதரவை நல்கியது. மேலும் ஆஸ்திரியா
செர்பியாவின் மீது படையெடுக்கும்போது அதன்
விளைவாக செர்பியாவிற்கு ரஷ்யா உதவுமானால்
ஆஸ்திரியாவிற்குஆதரவாகநான்களமிறங்குவேன்
என அறிவிக்கும் அளவிற்கு ஜெர்மனி சென்றது.
ஆஸ்திரியாவிற்கும் செர்பியாவிற்குமான இப்பகை
1914இல் போர் வெடிக்கக் காரணமாயிற்று.
பால்கன் போர்கள்
பதினெட்டாம் நூற்றாண்டின் முதல்பாதியில்
தென்மேற்குஐரோப்பாவில்துருக்கிவலிமைவாய்ந்த
நாடாகத் திகழ்ந்தது. அதன் பேரரசு பால்கனிலும்,
ஹங்கேரியின் குறுக்காகப் போலந்து வரையிலும்
பரவியிருந்தது. துருக்கியப் பேரரசு பால்கன்
பகுதிகளில் பல துருக்கியர் அல்லாத மக்களையும்
கொண்டிருந்தது. பால்கன் பகுதியைச் சேர்ந்த
துருக்கியரும் துருக்கியர் அல்லாத பல்வேறு தேசிய
இனங்களைச் சேர்ந்த மக்களும் பயங்கரமான
படுகொலைகளிலும் அட்டூழியங்களிலும்ஈடுபட்டனர்.
ஆர்மீனிய இனப்படுகொலைகள் இதற்கு ஒரு
பயங்கரமான எடுத்துக்காட்டு ஆகும்.
பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பாதியில்
துருக்கியப் பேரரசின் உறுதியற்ற அரசியல்
பொருளாதார சூழலைச் சாதகமாகக் கொண்டு
கிரீசும் அதனைத் தொடர்ந்து ஏனைய நாடுகளும்
ஒன்றன் பின் ஒன்றாகத் தங்களைத் துருக்கியின்
கட்டுப்பாட்டிலிருந்து விடுவித்துக் கொண்டன.
மாசிடோனியா பல்வேறு இனங்களைச்
சேர்ந்த மக்களைக் கொண்டிருந்தது. எனவே
மாசிடோனியாவைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள்
கொண்டுவருவதில் கிரீஸ், செர்பியா, பல்கேரியா
பின்னர் மாண்டி நீக்ரோ ஆகிய நாடுகளிடையே
போட்டியில் நிலவின. 1912ஆம் ஆண்டு மார்ச்
திங்களில்அவைபால்கன்கழகம்எனும்அமைப்பை
உருவாக்கின. இக்கழகம் முதல் பால்கன்போரில் (1912-1913) துருக்கியப் படைகளைத்
தாக்கித் தோற்கடித்தன. தொடர்ந்து, கைப்பற்றிய
பகுதிகளைப் பிரித்துக்கொள்வதில் பிரச்சனை
எழுந்தது. 1913 மே திங்களில் கையெழுத்தான
இலண்டன் உடன்படிக்கையின்படி அல்பேனியா
எனும் புதிய நாடு உருவாக்கப்பட்டது.
மாசிடோனியாவை ஏனைய பால்கன் நாடுகள்
தங்களுக்குள் பகிர்ந்து கொண்டன. துருக்கி,
கான்ஸ்டாண்டிநோபிளைச் சுற்றியுள்ள பகுதிகளை
மட்டும் கொண்ட அரசாகச் சுருக்கப்பட்டது.
இருந்தபபோதிலும் மாசிடோனியாவைப்
பிரித்தளித்ததில் செர்பியாவையும் கிரீஸையும்
பல்கேரியா தாக்கியது. ஆனால் பல்கேரியா
எளிதாகத் தோற்கடிக்கப்பட்டது. 1913 ஆகஸ்டு
திங்களில் கையெழுத்திடப்பட்ட புகாரெஸ்ட்
உடன்படிக்கையோடு இரண்டாம் பால்கன் போர்
முடிவடைந்தது.
உடனடிக் காரணம்
பால்கனில் நடைபெற்ற இந்நிகழ்வுகளில்
உச்சகட்டம் பாஸ்னியாவிலுள்ள செராஜிவோ
என்னுமிடத்தில் அரங்கேறியது. 1914 ஜூன் 28ஆம்
நாள் ஆஸ்திரியப் பேரரசரின் மகனும் வாரிசுமான
பிரான்ஸ் பெர்டினாண்டு, பிரின்ஸப் என்ற
பாஸ்னிய செர்பியனால் கொலை செய்யப்பட்டார்.
ஆஸ்திரியா இதனை செர்பியாவைக்
கைப்பற்றுவதற்கான வாய்ப்பாக எண்ணியது.
செர்பியாவிற்கு ஆதரவாகத் தலையிட ரஷ்யா
படைகளைத் திரட்டுகிறது என்னும் வதந்தியால்
ஜெர்மனி முதல் தாக்குதலைத் தானே தொடுப்பது
என முடிவு செய்தது. ஆகஸ்டு திங்கள் முதல்நாள்
ஜெர்மனி ரஷ்யாவிற்கு எதிராகப் போர்அறிவிப்பு
செய்தது. ஜெர்மனிக்கும் பிரான்சுக்குமிடையே
சச்சரவுகள் ஏதும் இல்லாவிட்டாலும், பிரான்சுக்கும்
ரஷ்யாவுக்குமிடையே ஏற்கெனவே கூட்டணி
இருந்ததால் ஜெர்மனி, பிரான்ஸ், ரஷ்யா ஆகிய
இரு நாடுகளுக்கும் எதிராகப் போர்செய்யத்
திட்டமிட்டது. மேலும் இச்சூழலைத் தனக்குச்
சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளவும் ஜெர்மனி
விரும்பியது. பெல்ஜியத்தின் நடுநிலைமையை
மதியாது அதனை ஜெர்மனி தாக்கவே இப்போரில்
இங்கிலாந்து பங்கேற்பது கட்டாயமாயிற்று.
Leave a Reply